Untitled Document
உங்கள் வாக்கு
தமிழ் செம்மொழி மாநாட்டின் உயரியநோக்கம்தான் என்ன?
 
Flash Content
Home
முக்கிய செய்தி
சிங்கள மயமாகும் வன்னிப் பகுதி: கேள்விக்குறியாகும் தமிழர் இருப்பு
[வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2010 08:29]
article thumbnail

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து ஒரு வருட காலம் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக தற்போது ஒரு புதிய முனையில் அரசாங்கம் போரைத் தொடுத்துள்ளது. வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும், பாதுகாப்பு என்ற பெயரில் அமைக்கப்படும் பாரிய படைமுகாம்களும், இராணுவக் குடியிருப்புக்களும் தமிழ் மக்களுடைய எதிர்கால இருப்பையே கேள்விக்கு [ ... ]


பிரதான செய்திகள்
தவிக்கும் எங்களுக்கும் வாழ்வு தாருங்கள்: மலேஷியாவில் கைவிடப்பட்டுள்ள 75 ஈழத் தமிழர்கள் கண்ணீர்க் கோரிக்கை
[வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2010 03:13]

அடிப்படை வசதிகள் பல தேவைப்படும் எமக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களோ, உலகத் தமிழர் அமைப்புக்களோ உதவ முன்வராததது மிகவும் வேதனையளிக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் மலேசியாவில் தவிக்கும் ஈழத் தமிழ் அகதிகள், இந்த 75 உயிர்களையும் உயிர்களாக மதித்து இவ்வுலகில் வாழ்வு தாருங்கள் என கண்ணீர் மல்க ஏக்கத்துடன் வேண்டிநிற்கின்றோம் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.   இலங்கை முகாம [ ... ]


மெனிக் பாம் அகதிகளின் பலவந்த இடமாற்றத் திட்டம் ரத்து: அகதிகளின் கடும் எதிர்ப்பையடுத்து திட்டத்தை கைவிட்டது அரசு
[வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2010 11:21]

செட்டிக்குள நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் சுமார் 5,000 பேரை பலவந்தமாக இடமாற்றம் செய்வதற்கு இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை, முகாமிலுள்ள அகதிகளின் எதிர்பார்ப்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளினாலும் இறுதி வேளையில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. செட்டிகுளம் வலயம் 4 முகாமி [ ... ]


மீண்டும் பொலிஸ் பதிவை மேற்கொள்ளும்படி வெள்ளவத்தை மக்களுக்குப் பணிப்பு - பொலிஸார்.
[வியாழக்கிழமை, 08 ஜூலை 2010 05:40]
article thumbnail

மேலிடத்தின் பணிப்புரையின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அதனால் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைவரும் கட்டாயமாக பொலிஸில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெவிக்கப்படுகிறது.


முரண்பாடுகள் இருப்பினும் ஐ.நா.வுடன் இணைந்து செயற்படவே இலங்கை விருப்பம்: பசில்
[வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2010 11:18]


ஐக்கிய நாடுகள் சபையுடன் சில முரண்பாடுகள் இருக்கின்ற போதிம், அதனுடன் இணைந்து செயற்பட்டு நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கே இலங்கை விரும்புவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்திருக்கின்றார். சர்வதேச மனிதநேய தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பொருளாதார அபிவிருத [ ... ]


கொழும்பும், நிபுணர்கள் குழுவிற்கு எதிராக விமலின் ஐநா அலுவலக முற்றுகைப் போராட்டம் அரசாங்கத்தின் போலியான எதிர்ப்பு நடவடிக்கை ‐ இடதுசாரி விடுதலை முன்னணி.
[வியாழக்கிழமை, 08 ஜூலை 2010 06:03]
article thumbnail

பான்‐கீ‐மூன் இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக நியமித்துள்ள நிபுணர்கள் குழுவிற்கு எதிரான அமைச்சர் விமல் வீரவன்ஸவின் ஐக்கிய நாடுகள் அலுவலக முற்றுகைப் போராட்டம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போலியான எதிர்ப்பு நடவடிக்கை என இடதுசாரி விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


அரச ஊழியர்களுக்கான 2500 ரூபா சம்பள உயர்வு - பிரதியமைச்சர் சந்திரசிறி கஜதீர.
[வியாழக்கிழமை, 08 ஜூலை 2010 00:00]
article thumbnail

2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமென பிரதியமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.


கோமா நிலையை அடைந்தவர் மரணமானதையடுத்து விபத்துக்குக் காரணமானவரைக் கைது செய்யுமாறு பொத்துவில் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 08 ஜூலை 2010 00:00]
article thumbnail

வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்து கோமா நிலையை அடைந்தவர் மரணமானதையடுத்து விபத்துக்குக் காரணமானவரைக் கைது செய்யுமாறு பொத்துவில் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தனியார் பல்கலைக்கழகங்களில் அனுமதி - உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க.
[வியாழக்கிழமை, 08 ஜூலை 2010 00:00]
article thumbnail

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறாதவர்களுக்கு இலங்கையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுக்கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.



கட்டுரைகள்கே.பி.யை பயன்படுத்தும் கொழும்பின் அரசியல்...

article thumbnail

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு களத்தில் ஆயுதங்களை மௌனித்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு இன்றுள்ள மிகப்பெரிய சவால் 'தமிழ் டயஸ்போரா" (Tamil Diaspora) எனப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூ [ ... ]


முரசின் பார்வைநெருக்கடிகளால் சூழப்பட்டிருக்கும் மகாராஜா. [ ராஜ.சிவன் ]

article thumbnail

இலங்கையின் புதிய வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.


பதிவுகள்பொறுப்பு மிக்க நம் தமிழ் உறவுகளே... [ H.வேதா ]

article thumbnail

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வும் அன்பு, பண்பு, பாசம், அரவணைப்பு என்ற மனித நேயக் குணங்களுக்குள் அல்லது பண்புகளுக்குள் கட்டுண்டு போயிருக்கின்றது.


தவிக்கும் எங்களுக்கும் வாழ்வு தாருங்கள்: மலேஷியாவில் கைவிடப்பட்டுள்ள 75 ஈழத் தமிழர்கள் கண்ணீர்க் கோரிக்கை

அடிப்படை வசதிகள் பல தேவைப்படும் எமக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களோ, உலகத் தமிழர் அமைப்புக்களோ உதவ முன்வராததது மிகவும் வேதனையளிக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் மலேசியாவில் தவிக்கும் ஈழத் தமிழ் அகதிகள், இந்த 75 உயிர்களையும் உயிர்களாக மதித்து இவ்வுலகில் வாழ்வு தாருங்கள் என கண்ணீர் மல்க ஏக்கத்துடன் வேண்டிநிற்கின்றோம் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 

இலங்கை முகாமில் இருந்து தப்பித்துச்சென்று மலேசிய முகாமில் சிக்கித்தவித 75 ஈழத்தமிழர்கள் சில தினங்களுக்கு முன்பு விடுதலையாகிவிட்டனர். இவர்கள் தற்போது மலேசியாவில் மலேசிய மாற்று செயலணியில் தங்கியுள்ளனர். உலகத் தமிழர்களுக்கு கோரிக்கை வைத்து இவர்கள் எழுதியிருக்கும் கண்ணீர் கடிதத்திலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்கள். இந்தக் கடிதத்தின் முழு விபரமும் வருமாறு:

ஐநா சபைக்கும், மனித நேயத்தை நிலைநாட்டி அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் சர்வதேசநாடுகளுக்கும் எங்களுடைய கண்ணீர் ததும்பிய வேண்டுகோள். முதற்கண் எமது அவலநிலையை உலகிற்கு கூறும் அனைத்து ஊடகங்களையும் நன்றி உணர்வோடு கரம்பற்றி நிற்கின்றோம்.

கடந்த 30 வருடகாலமாக சொந்த மண்ணிலே அடிமைகளாக, அகதிகளாக உறவுகளை இழந்து எங்களுடைய உடமைகளை இழந்து உயிரைமட்டும் மிச்சம் கொண்டு சுதந்திர வாழ்வை தேடிகொண்டு இலங்கையில் இருந்து வெளியேறிய நாங்கள் கடல்மார்க்கமாக அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நாடுகளை நோக்கி கடந்த 18.04.2010 அன்று அக்கரைப்பற்றில் இருந்து புறப்பட்டோம்.

இதில் குழந்தைகள் 08, பெண்கள் 06, ஆண்கள் 61 அடங்கலாக 75 உறவுகள் சுதந்திரவாழ்வுக்காக உயிரைப் பணயம் வைத்து படகுமூலம் பயணம் ஒன்றை மேற்கொண்டோம். 


5 நாட்கள் கடந்த நிலையில் 23.04.2010 அன்று படகில் ஏற்பட்ட பழுதுகாரணமாகவும், மலேசியா கடற்பரப்பினை நோக்கி காற்று அடித்த காரணத்தினாலும் படகு மலேசியக் கடற்பரப்புக்குள் நுழையநேர்ந்தது உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நிலையில் மலேசியப் கடற்படையினர் எம்மைக்காப்பாற்றுவதாக கூறி மலேசியா அழைத்தார்கள்.


நாங்கள் மலேசியாப் பகுதிக்கு வரவிரும்பாத நிலையிலும் கூட எம்மை கைது செய்து மலேசியாவில் 110 நாட்களாக சிறை வைத்தனர். 


இந்த வேளையில் எமக்காக எங்களுடைய உணர்வுகளை உணர்ந்த எமது இன உணர்வாளரான மலேசியாவின் மாற்று செயலணித் தலைவரான கலைவாணர் அவர்களின் மிகக்கடுமையான முயற்சியினாலும், சர்வதேக தமிழர் அமைப்புகளின் உதவியின் பயனாக 63 உயிர்கள் சிறையில் இருந்து மீட்கப்பட்ட நாங்கள் கலைவாணரின் பாதுகாப்பிலும்,  பராமரிப்பிலும் இருக்கின்றோம். 


இன்னும் எங்களுடன் வந்த 12 உறவுகள் விடுதலையாகமால் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலே நாங்கள் போராட்டவாதிகளோ, போராளிகளோ அல்ல மாறாக சுதந்திரமாக வாழ்வைத் தேடி அலையும் அப்பாவி பொதுமக்கள் நாங்கள்.


ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பான UNHCR எம்மை அகதிகளாக ஏற்றுக்கொண்டுள்ள நாங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலும், வேலை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இலங்கையில் இருந்து வந்த நாங்கள் எதும் அற்றவர்களாக அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம்.


எம்முடன் உள்ள சிறுவர்கள் 2வருடங்களுக்கு மேலாக கல்வியை இழந்தவர்கள், பாதுகாக்கப்பட வேண்டிய பெண்கள் பாராமரிக்கப்பட வேண்டிய முதியவர்கள், வாழ்நிலைக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களும் உள்ளோம்.


இவ்வுலகின் மனிதநேயம் எங்கே?
ஈழத்து அகதிகளான நாங்கள் வாழத்தகுதி அற்றவர்களா? இலங்கையில் சுதந்திரமான வாழ்வை வாழ முடியாத நாங்கள் எங்கு சென்று வாழ்வது?


கடலில் கலந்த எம் கண்ணீருக்கு யார் தருவார்கள் பதில் என தவித்துக்கொண்டிருக்கின்றோம். உயிரை மட்டும் மிச்சம் கொண்ட நாங்கள் வாழ்வில் தொடர்துன்பத்தை அனுபவிக்க விரும்பவில்லை.


எமது அவல நிலையை தொடரவிடாமல் மனிதாபிமான அடிப்படையில் உலகில் அகதிகளுக்கு தஞ்சம் கொடுக்கும் நாடுகள் எம்மையும் உயிர்களாக மதித்து விரைந்து அடைக்கலம் தாருங்கள் என தற்காலிகமாக மலேசிய பினாங்கு மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் நாங்கள் பணிவன்புடன் வேண்டிநிற்கின்றோம். 

மனிதநேய மிக்க தலைவர்களும் உலக தமிழ் உறவுகளும் எமது அவல நிலையை வெறும் செய்திகளாக மட்டும் பார்த்து மறந்து விடாமல் எமக்காக நீங்கள் வாழும் நாடுகளிலும் பரிந்துபேசுங்கள் எனவும் வேண்டிநிற்கின்றோம்.

மலேசிய பினாங்குப் பகுதியில் மாற்றுச் செயலணி தலைவர் கலைவாணர் அவர்களுக்குச் சொந்தமான அலுவலகக் கட்டடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருக்கும் எமக்கு கலைவாணர் தலைமையிலான ஒரு சில உள்ளுர் அமைப்புகள் மட்டுமே உதவி செய்கின்றது. 

மாறாக அடிப்படை வசதிகள் பல தேவைப்படும் எமக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களோ, உலகத் தமிழர் அமைப்புக்களோ உதவ முன்வரவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கின்றது.

இந்த 75 உயிர்களையும் உயிர்களாக மதித்து இவ்வுலகில் வாழ்வு தாருங்கள் என அனைவரையும் கண்ணீர் மல்க ஏக்கத்துடன் வேண்டிநிற்கின்றோம்.

 


கண்ணீருடன்
சுதந்திர வாழ்வுதேடி தவிக்கும் 
75இலங்கைத் தமிழ் அகதிகள்.
மாற்றுச் செயலணி அலுவலகம்,
பினாங்கு,மலேசியா
மின்னஞ்சல் முகவரி: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் ’’

 
தேடல்
விளம்பரம்
பதிவுசெய்யும் பகுதி
வாழ்துகள்
அறிவித்தல்கள்